• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் முகமூடி அணிந்து போராட்டம்

December 9, 2017 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிய அரசுசாரா மருத்துவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து,முதுநிலை மருத்துவ மாணவர்கள் 11ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிலும் மருத்துவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து 11ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,இன்று(டிச 9) முகத்தில் முகமூடி அணிந்த படி , தங்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்களை பறக்க விட்டனர்.மேலும், வெளிப்படையாக கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும் முறைகேடாக நிரப்பிய இடங்களை திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க