• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையை சேர்ந்த மேஜிக் நிபுணருக்கு சர்வதேச சாம்பியன்ஷிப் பட்டம்

October 11, 2018 தண்டோரா குழு

பிரான்ஸ் நாட்டில் சர்வதேச மேஜிக் சொசைட்டி கூட்டமைப்பு சார்பில் சர்வதேச அளவிலான மேஜிக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் கோவையை சேர்ந்த இளம் மேஜிக் நிபுணர் தயாநிதி பங்கேற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.இந்தியாவை சிறந்த ஒருவர் சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.இவர் ஏற்கனவே இந்தியாவின் கிரான்ட் சாம்பியன் அவார்டு வின்னர்,இந்தியாவின் நம்பர் 1 மேஜிசியன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய மேஜிக் நிபுணர் தயாநிதி,

“குழந்தை பருவம் முதலே மேஜிக் செய்வதில் ஆர்வம் கட்டி வருகின்றேன்.இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மேஜிக் செய்வதில் அனுபவம் உள்ளது.நிறுவனங்கள், விழாக்கள்,மேடைகளில் தொடர்ந்து சிறப்பான மந்திர தந்திர காட்சிகளை நடத்தி வருகிறேன்.சர்வதேச போட்டியில் 45 பேர் கலந்து கொண்டனர்.அதில் சிறப்பான மந்திர செயல்களை செய்து பட்டம் வென்றேன்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க