• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானை தாக்கி பால் வியாபாரி பலி

October 24, 2018 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் பால் வியாபாரி பலியானார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியை சார்ந்தவர் சுரேஷ்.இவர் சொந்தமாக பால் வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்றிரவு தொண்டாமுத்தூரில் இருந்து விராலியூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது விராலியூர் அருகே வரும்போது சாலையின் எதிர்புறம் திடீரென வந்த ஒற்றை காட்டு யானை சுரேஷை தாக்கி தூக்கி வீசியது.இதில் படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார்.

அப்போது அந்த பகுதியில் யானை விரட்டும் பணியில் இருந்த வனத்துறையினர் யானையின் சத்தத்தை கேட்டு அங்கு சென்று பார்த்த போது சுரேஷ் மயக்க நிலையில் இருந்துள்ளார்.இதனைத்தொடர்ந்து 108 அவரச ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர்.அங்கு வந்த மருத்துவ உதவியாளர்கள் சுரேஷை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.ஆனால் வழியிலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் விராலியூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க