• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

NEET/JEE பயிற்சி திட்டத்தில் ரூ.1 லட்சம் வைப்பு தொகை மோசடி? சுகுணா PIP பள்ளி தலைவர், FIITJEE நிறுவனர் மீது வழக்குப்பதிவு

June 19, 2026 தண்டோரா குழு

கோவையில் செயல்பட்டு வரும் சுகுணா PIP பள்ளி மற்றும் FIITJEE நிறுவனத்தின் ஒருங்கிணைந்த NEET/JEE பயிற்சி திட்டத்தில் மாணவர்களை சேர்த்த பெற்றோரிடம் வசூலிக்கப்பட்ட பாதுகாப்பு வைப்பு தொகையை திருப்பி வழங்காததாக எழுந்த புகாரின் பேரில், பள்ளி தலைவர் மற்றும் FIITJEE நிறுவனருக்கு எதிராக பீளமேடு காவல்துறையினர் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை வட்டமலைபாளையத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவர் அளித்த புகாரில், தனது மகனை 2023-ஆம் ஆண்டு சுகுணா PIP பள்ளியில் சேர்த்தபோது, FIITJEE நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட NEET/JEE பயிற்சி திட்டத்திற்காக ரூ.1 லட்சம் பாதுகாப்பு வைப்பு (Refundable Caution Deposit) தொகை செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

பயிற்சி மற்றும் பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர் 60 நாட்களுக்குள் அந்த தொகை முழுமையாக திருப்பி வழங்கப்படும் என பள்ளி நிர்வாகமும் FIITJEE நிறுவனமும் உறுதியளித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், 2025 பிப்ரவரி மாதம் படிப்பு முடிவடைந்த பின்னரும் பலமுறை கோரிக்கை விடுத்தும் பணம் திருப்பி வழங்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும்,இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தை அணுகியபோது FIITJEE நிறுவனத்தை தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டதாகவும், FIITJEE நிர்வாகத்தை அணுகியபோதும் எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பல பெற்றோர்களும் இணைந்து காவல்துறையில் புகார் அளித்த நிலையில், பீளமேடு காவல் நிலையத்தில் CSR பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.விசாரணையின் அடிப்படையில்,சுகுணா PIP பள்ளி தலைவர் வி. லட்சுமிநாராயணசாமி மற்றும் FIITJEE நிறுவனத்தின் நிறுவனர் தினேஷ் குமார் கோயல் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 (மோசடி) கீழ் குற்ற எண் 215/2026 ஆக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி வளாகத்தில் CBSE விதிமுறைகளுக்கு முரணாக தனியார் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும் புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கின் விசாரணையை பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் வசூலிக்கும் பாதுகாப்பு வைப்பு தொகைகள் தொடர்பாக இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க