August 3, 2026
தண்டோரா குழு
கோவை பாலக்காடு சாலை, குனியமுத்தூரில், பிரேம் தீப் ஜுவல்ஸ்-ன் புதிய ஷோரூம் துவக்க விழா இன்று (03.08.2026) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நடிகை ஆன்ட்ரியா கலந்து கொண்டு புதிய ஷோரூமை ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார்.
இதுகுறித்து பிரேம் தீப் ஜுவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேவராஜ் பாஸ்கர் கூறும்போது:-
தங்க நகை விற்பனையில் 120 ஆண்டுகள் பாரம்பரியம் மற்றும் அனுபவம் பெற்ற பிரேம் தீப் ஜுவல்ஸ் கேரளாவில் பாலக்காட்டை தலைமையிடமாகவும், துபாயில் ஒரு கிளையையும் கொண்டுள்ளது. தற்போது தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் எங்களது நேரடி விற்பனை ஷோரூம் இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது.
பிரேம் தீப் என்பது எங்களது மறைந்த தாயார் அவர்களின் பெயரான பிரேமா அவர்களின் பாசப் பிணைப்புடன் தீபத்தை இனைந்து இந்த பெயரை கொண்டுள்ளது. கோவையில் உள்ள ஷோரூம் சுமார் 4300 சதுர அடிகள் கொண்டு செயல்படுகின்றது. கோவையில் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கம் அனைத்தையும் உணர்த்தும் அற்புதமான தங்க வைர நகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே எங்களின் முதன்மையான நோக்கம்.
மேலும் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மற்றும் ட்ரெண்டிங்கான நகைகள் எங்களது ஷோரூமில் இடம்பெற்றுள்ளன. இங்கு பாரம்பரியமும், அதே சமயம் நவீன காலத்து வடிவமைப்புடன் ஏராளமான நுண்கலை வேலைப்பாடுகளுடன் கூடிய டிசைன்களில் தரமான நகைகள் நியாயமான விலையில் கிடைக்கும். மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற அவர்கள் விரும்பும் டிசைனில் நகைகள் வடிவமைத்து தரப்படும்.
திறப்பு விழாவை முன்னிட்டு நகை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 24 காரட் தங்க நாணயமும், வைரத்திற்கு செய்கூலியில் 50 சதவீதம் தள்ளுபடியும், வெள்ளி நகை வாங்கும் அனைவருக்கும் நிச்சயப்பரிசும் மற்றும் சேமிப்பு திட்டத்தில் இணையும் அனைவருக்கும் வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
துவக்க விழாவின் போது பிரேம் தீப் ஜுவல்லர்ஸ் இயக்குனர் ரேஷ்மி தேவராஜ், நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் திரு. அன்பரசன், பி.கே.தாஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மொரிஷியஸ் – இந்தியா இடையிலான கௌரவ வர்த்தக ஆணையரும், நேரு கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமான வழக்கறிஞர் டாக்டர் பி. கிருஷ்ணதாஸ் மற்றும் பி.கே. தாஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், நேரு கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளருமான டாக்டர் பி. கிருஷ்ணகுமார்,நேரு கல்வி குழுமத்தின் இயக்குனர் டாக்டர் அ.முரளிதரன் மற்றும் கவல் துறை உதவி அணையாளர் மகேஷ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.