• Download mobile app
17 Oct 2026, SaturdayEdition - 3902
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித், சூர்யா, ஜீவா ஆகியோரைக் கைது செய்த சென்னை போலீஸ்.

July 15, 2016 தண்டோரா குழு

சென்னை வேளச்சேரி பகுதியில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட அஜித், சூர்யா மற்றும் ஜீவாவை வேளச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை வேளச்சேரியில் உள்ள 100 அடி சாலையில் இரவு நேரத்தில் நின்றுகொண்டு ஒரு கும்பல் அவ்வழியாகச் செல்வோரை தாக்கி அவர்களிடம் இருந்து செல்போனை பறித்து வந்தது. இந்நிலையில் நேற்றிரவு அவ்வழியாக வந்த ஒரு நபரிடம் செல்போனைப் பறிக்க முயன்ற மூன்று நபர்களை பொதுமக்கள் பிடிக்க முற்பட்டனர். இதில் ஒருவன் மட்டுமே சிக்கினான்.

அவனை பொதுமக்கள் வேளச்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து புகார் பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய இருவரையும் தேடினர். இதில் இன்று அதிகாலை அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் மூவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களது பெயர்கள் சூர்யா, அஜித் மற்றும் ஜீவா எனப்படும் ஜீவரத்தினம் எனவும் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள் வேறு ஏதேனும் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களா எனவும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தலைப்பைப் பார்த்துட்டு நடிகர்கள் என நினைத்துப் படித்திருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல………..

மேலும் படிக்க