• Download mobile app
30 Jan 2026, FridayEdition - 3642
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆயிரம் ரூபாய்க்குக் கற்பழிக்கலாம் ! பீகாரில் நடக்கும் கொடுமை

August 9, 2016 தண்டோரா குழு

உலகளவில் இந்தியா பல முன்னேற்றங்களை அடைந்துகொண்டு இருக்கும் நேரத்தில் தற்போது புதிதாகப் பெண்கள் மீதான பாலியல் வன்முறையில் ஒரு முன்னேற்றம் அடைந்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களான பிகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாலியல் வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன.

ஆனால் அந்த மாநிலத்தை ஆள்பவர்கள் அதற்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததாலும், ஜாதி மற்றும் பல வகை பிரிவுகளில் கட்டுப்பட்டு இருப்பதாலும் ஓட்டுக்காக அவர்கள் அமைதி காத்து வருகின்றனர்.

இதனால் நாளுக்கு நாள் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபமாக நடந்த ஒரு பஞ்சாயத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு இந்தப் பாலியல் வன்முறைகளுக்கு எல்லாம் உச்சமாக உள்ளது.

பீகாரில் உள்ள சித்பூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவன், அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவி ஒருவரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளார். பின்னர் அதை அவளுடைய பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் எனக்கூறியே ஆறுமாத காலம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பின்னர் ஆறுமாதம் கழித்து மாணவி கர்ப்பமானதை அடுத்துப் பெற்றோருக்கு இவ்விசயம் தெரியவந்துள்ளது. பின்னர் இரு குடும்பத்தாரையும் அழைத்த பஞ்சாயத்தார், கருத்து கேட்டபோது, பெண்ணின் குடும்பம் அந்த இளைஞனே பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

ஆனால் அதற்கு அவர் மறுக்கவே, பஞ்சாயத்தார் வாலிபர் 1,000 ரூபாய் அபராதமும், 51 தோப்புகரணமும் போடவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும் இது குறித்து கூறும்போது, இது கற்பழிப்பு இல்லை பரஸ்பர ஒப்பந்தம் எனத் தெரிவித்துள்ளனர்.

எது தான் இந்த நிகழ்விலேயே மிகவும் கொடூரமான செயல். ஆகா மொத்தம் ஒரு உயர் வகுப்பு மனிதன் சராசரியாக ஒரு நாள் உணவிற்காகச் செலவு செய்யும் பணம் இருந்தால் பீகாரில் ஒரு குழந்தையை ஆறுமாதங்கள் பாலியல் வன்முறை செய்யலாம் எனச் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

இவர்களுக்கு எல்லாம் விவேக் அவர்கள் ஒரு படத்தில் மைனருக்குக் கொடுக்கும் தண்டனைப் போல கொடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

மேலும் படிக்க