• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் வால்மார்ட் கடையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

November 2, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் தோர்ன்டன் நகரிலுள்ள வால்மார்ட் கடையில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தின் தோர்ன்டன் நகரிலுள்ள பிரபல வால்மார்ட் ஸ்டோரில் இன்று(நவம்பர் 2) காலை ஏராளமான வாடிக்கையாளர்கள் இருந்தனர். அப்போது, அங்கு நுழைந்த மர்ம நபர், தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு, சரமாரியாக சுட்டான்.இதனால் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் பீதி அடைந்து, கடையை விட்டு வெளியேறினர்.

இந்த திடீர் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றொரு பெண் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்தவர்களுடைய உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு காரணமான நபரை விரைவில் கைது செய்வோம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க