• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென் கொரியாவுக்கு போர் விமானங்களை அனுப்பிய அமெரிக்கா

September 14, 2016 தண்டோரா குழு

வடகொரியாவின் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து, தென்கொரியாவுக்கு ஒலியை விட வேகமாக பறந்து குண்டு வீசும் ஆற்றல் வாய்ந்த போர் விமானங்களை அனுப்பியுள்ளது அமெரிக்கா.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறும் விதத்தில் வடகொரிய தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.ஏற்கனவே மூன்று முறை அணு ஆயுத சோதனைகளை நடத்திய வடகொரிய, கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி அணுகுண்டை விட வேகமாக செல்லக்கூடிய சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையும், மற்றும் 5வது முறையாக அணு குண்டு சோதனையையும் நடத்தி அதில் வெற்றி கண்டதாக அறிவித்துள்ளது வடகொரியா.

இதுவரை அந்நாடு நடத்திய சோதனைகளிலேயே இது மிகவும் சக்தி வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், இந்த அணுகுண்டு சோதனையை உலகுக்கு அறிவித்த வடகொரியா, இந்த அணுகுண்டு சோதனை மூலம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் நடுத்தர ஏவுகணையில் அணுகுண்டை செலுத்தும் திறனை அடைந்திருக்கிறோம் என்று கூறியுள்ளது.

வடகொரியாவின் இந்த செயலால், உலக நாடுகளின் கண்டனத்துக்கும் வழிவகுத்துள்ளது. இதை பற்றி அவசரமாக கூடி விவாதித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்போவதாக தெரிவித்தது.

இந்நிலையில் வடகொரியாவின் அண்டை மாநிலமான தென் கொரியாவிற்கு அமெரிக்க நேற்று 2 போர் விமானங்களை அனுபியுள்ளது. பி1பி ரகத்தை சேர்ந்த இந்த விமானங்கள் ஒலியை விட வேகமாக பறந்து சென்று குண்டுகளை வீசும் ஆற்றல் கொண்ட சுப்பர்சோனிக் வகையாகும்.

இந்த போர் விமானங்களின் பின்னால் அமெரிக்கா மற்றும் தென்கொரிய விமானங்கள் பாதுகாப்புக்கு சென்றன.அமெரிக்காவின் போர் விமானங்கள், ஓசான் விமான தளத்தின் மீது பறந்ததை முன்னணி செய்தி நிறுவனத்தின் புகைப்பட கலைஞர் ஒருவர் பார்த்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், அந்த விமான தளம், வடகொரியா எல்லையில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தென்கொரியாவுக்கு போர் விமானங்களை அனுப்பி தனது ஆதரவை தெரிவிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், அந்நாட்டின் போர் விமானங்கள் அங்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தென் கொரியா மீது பறந்த அந்த போர் விமானங்கள் அங்கு தரை இறங்காமல், அமெரிக்காவால் நிர்வகிக்கப்படுகிற குவாம் ஆன்டர்சன் விமானப்படை தளத்துக்கு திரும்பி விடும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.கொரிய தீபகற்ப பகுதியில் எப்போதெல்லாம் பதற்றம் நிலவுகிறதோ அப்போதெல்லாம் அது போன்று அமெரிக்க போர் விமானங்கள் அங்கு செல்வது வழக்கமாகி வருகிறது.

மேலும் படிக்க