• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விரைவாக யோசித்து நோயாளிகளின் உயிரை காத்த விமானி

May 26, 2016 தண்டோரா குழு.

இதய நோயாளிகளை ஏற்றிக்கொண்டு குர்கான் நோக்கி வந்த ஆம்புலன்ஸ் விமானம் தெற்கு டெல்லியில் உள்ள நஜப்கர் அருகே உள்ள வயலில் தரையிறக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து இதய நோயாளிகளை ஏற்றிக்கொண்டு குர்கான் நோக்கி வந்த ஆம்புலன்ஸ் விமானத்தின் எஞ்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் தெற்கு டெல்லியில் உள்ள நஜப்கர் அருகே உள்ள வயலில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானி கடைசி நேரத்தில் சாமர்த்தியமாகவும் தைரியமாகவும் முடிவெடுத்ததன் மூலம் பலர் காப்பற்றபட்டனர்.

விமானத்தை தரையிறக்கிய கடைசி நிமிடங்கள் குறித்து விமானி அமித் குமார் கூறும்போது,
பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து இதய நோயாளிகளை ஏற்றிக்கொண்டு குர்கான் நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.

விமானம் மேலே பறந்துகொண்டிருந்த போது திடீரென முதல் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு என்ஜின் செயலிழந்தது. ஆனாலும், இரண்டாவது என்ஜின் மூலம் விமானத்தை இயக்கி விமான நிலையத்தில் தரையிறக்கி விடலாம் என்று நினைத்துத் தொடர்ந்து சென்றோம். ஆனால் எதிர்பாராத விதமாக அடுத்த 10 நிமிடத்திலேயே இரண்டாவது என்ஜினும் செயலிழந்துவிட்டது.

நாங்கள் சென்று கொண்டிருந்த இடத்தில் இருந்து விமான நிலையத்தை அடைய இன்னும் 15 கி.மீ. தொலைவு தான் இருந்தது. இந்தச் சூழலில் விமான நிலையத்தைச் சென்றடைய முடியாது என்று தெரிந்து விட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெவ்வேறு விதமாக யோசிக்காமல் நஜப்கர் நகரத்தை நோக்கி விமானத்தைத் திருப்பினோம்.

நகரை நாங்கள் நெருங்கிய போது சுமார் 3,000 அடிக்கும் குறைவான உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது பயணிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற பதட்டமும், நோக்கமுமே என்னிடம் இருந்தது. எனவே, கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினோம்.

காயிர் கிராமத்திற்கு மேல் சுமார் 100 மீட்டர் உயரத்தில் விமானம் பறந்த போது தரையைத் தொடுவதற்கு 10 வினாடிகளே இருந்தது. அப்போது மின்கம்பங்கள் எதுவும் இல்லாத திறந்த, வயல்வெளி தெரிந்தது. இதனால் அங்கு தரையிறக்க முடிவு செய்தோம். எங்கள் திட்டப்படி வெட்ட வெளியில் மோதியபடி விமானம் தரையிறங்கியது. பயணிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எனது நோக்கம் நிறைவேறியது என்றார்.

மேலும் படிக்க