• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

77 நாட்களுக்கு பிறகு ஓடத்தொடங்கிய தனியார் பேருந்துகள்

June 10, 2020 தண்டோரா குழு

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 5-ம் கட்ட பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்க கடந்த ஜீன் 1 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

கோவை திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம் நாமக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்குள் மட்டும் தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 77 நாட்களுக்கு பிறகு இன்றிலிருந்து தமிழகம் முழுவதுமுள்ள தனியார் பேருந்துகள் இயக்கபடுகிறது. இதில் கோவையில் மட்டும் 150 பேருந்துகள் இயக்கப்படுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டும், முகக்கவசம், கையுறைகள், கிருமி நாசினி திரவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு பாதுகாப்போடு இயக்கப்படுவதாக தெரிவித்தனர்.மக்களின் கூட்டம் குறைவாக இருப்பதால், அரசு பேருந்துகள் குறைக்கப்பட்டு இருந்த நிலையில் , இன்று முதல் தனியார் பேருந்துகள் ஓடத்துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க