• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

6 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு : 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

April 29, 2023 தண்டோரா குழு

கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) தலைமையில் அனைத்து தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் இணைந்து இம்மாதத்தில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள்விதிகள் தொடர்பாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) கூறியிருப்பதாவது:

சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் 85 மீன் மற்றும் இறைச்சி விற்பனை கடைகளில் எடை குறைவு, முத்திரை அல்லது மறுமுத்திரை இடப்படாத எடை அளவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத எடையளவுகள், மறுபரிசீலனை சான்றுகாட்டி வைக்கப்படாமை, சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காதது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 35 மின்னனு தரசுகள் பறிமுதல் செய்யப்பட்டு 27 கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் சிகரெட் லைட்டர்கள் விற்பனை செய்யும் 19 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 முரன்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள் விற்பனை கூடங்களில் உரிய பதிவு சான்று பெறாதது, உரிய அறிவிப்பு இல்லாதது, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதவ் விலைக்கு விற்பனை செய்தல், அறிவிப்பு விலைப்பட்டியல் தொடர்பாக 40 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 8 முரன்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

குழந்தை தொழிலாளர் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில் 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 5 குழந்தைகள் வளரிளம் பருவத்தினர். இது தொடர்பாக 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க