• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

570 கோடி ரூபாயைக் கொண்டு சென்ற 3 லாரிகளின் எண்கள் போலி – சிபிஐ

August 8, 2016 தண்டோரா குழு

திருப்பூர் அருகே படிபட்ட கண்டெயினர் லாரிகளின் பதிவெண்கள் போலியானவை என சிபிஐயின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.2016 தமிழக சட்டப்பேரவை நடைபெற்ற தருணத்தில், திருப்பூர் அருகே 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட 570 கோடி ரூபாயைத் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் சமயத்தில் இவ்வளவு தொகை கொண்டு சொல்லப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அதன் பின்னர், இந்த பணத்திற்கு ஸ்டேட் வங்கி உரிமை கோரியது. மேலும், ஆந்திர மாநிலத்தில் பண பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் கோவை பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளையிலிருந்து விசாகப்பட்டினத்துக்கு 3 கன்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

எனினும் உரிய ஆவணங்கள், தாமதமாக ஸ்டேட் பேங்க் உரிமை கொண்டாடியது போன்ற பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ள இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சில மாதங்களுக்கு முன்னர் திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ முதற்கட்ட விசாரணையை முடித்த பிறகு சிபிஐ வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், சிபிஐயின் முதற்கட்ட விசாரணையில் 570 கோடி ரூபாயை ஏற்றிச் சென்ற கண்டெயினர் லாரியின் பதிவெண்கள் போலியானவை எனத் தெரிய வந்துள்ளது. கண்டெயினர் லாரிகள் மூன்றும் ஆந்திர மாநில பதிவெண்களை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க