• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

15 -ம் தேதி திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் – சி.ஐ.டி.யு.

May 9, 2017 தண்டோரா குழு

போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் வரும் 15 -ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் 13 வது ஊதிய ஒப்பந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வரும் 15-ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தன.

இந்நிலையில் போக்குவரத்து தொழிற்ச்சங்கத்தினர், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை வழங்க அரசு ஒதுக்கி உள்ள ரூ.500 கோடி போதாது, அரசு உடனே ரூ.2,000 கோடி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட வில்லை.

இதன் காரணமாக திட்டமிட்டப்படி வரும் 15 -ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று செய்தியாளர்களிடம் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

தொழிற்ச்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “500 கோடி ரூபாய் நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்படும், போராட்டம் நடத்துவதால் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காது, போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க