October 9, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் மிகவும் நம்பகமான நிறுவனமாக விளங்கி வரும் சின்டெக்ஸ், ‘சின்டெக்ஸ் எடெர்னோ’ என்னும் புதிய தண்ணீர் தொட்டியை அறிமுகம் செய்துள்ளது. இது சிறந்த ஆயுள், சுகாதாரம் மற்றும் நீண்ட கால பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை தண்ணீர் தொட்டியாகும்.
இந்தியாவிலேயே முதல் முறையாக 50 ஆண்டு கால உத்தரவாதத்துடன் வரும் இந்த சின்டெக்ஸ் எடெர்னோ, இந்திய வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் மன அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கிறது. 100 சதவீத உணவு தர பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த தொட்டி, குடிநீரை பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் சேமிப்பதை உறுதி செய்கிறது. இதில் ரசாயன கலப்போ அல்லது மாசுபடும் அபாயமோ இல்லை. இந்தியாவின் பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் நம்பகத்தன்மையுடன் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த தொட்டி, கடுமையான வெளிப்புற சூழல்களையும் நீண்ட நேர சூரிய ஒளியையும் தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றது. இதன் முக்கிய அம்சமான ‘ஆக்டிவ் சில்வர் தொழில்நுட்பம்’, பாசி, பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் வராமல் தடுத்து, மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது.
இதன் மூலம் சேமிக்கப்பட்ட தண்ணீர் அன்றாட பயன்பாட்டிற்கு சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். புற ஊதா கதிர்களால் பாதிக்கப்படாத மூடி, சூரிய ஒளி உள்ளே செல்வதைக் குறைத்து, வெளியில் இருந்து வரும் மாசுகளைத் தடுத்து சுகாதாரத்திற்கு மேலும் உறுதியளிக்கிறது. கடுமையான உலகளாவிய தரநிலைகளின்படி உருவாக்கப்பட்ட சின்டெக்ஸ் எடெர்னோ, ஆர்ஓஎச்எஸ் ஐரோப்பிய தரநிலை மற்றும் என்எஸ்எஃப். சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.
இது தொட்டியில் ஈயம் இல்லை என்பதையும், சேமிக்கப்படும் தண்ணீரில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலக்காது என்பதையும் உறுதி செய்கிறது.இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பாலிமர் கலவை, நீண்ட காலத்திற்கு வெளிப்புற வானிலை மற்றும் புற ஊதா கதிர்வீச்சினால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தொட்டியின் வலிமையை தக்கவைக்க உதவுகிறது.
மேலும், இதன் வலுவான கட்டமைப்பு,
சாதாரண தொட்டிகளை விட 1.5 மடங்கு அதிக எடையைக் கொண்டது (1000 லிட்டர் தொட்டிக்கு தோராயமாக 33 கிலோ). இது தொட்டியின் வலிமை மற்றும் நீண்ட கால ஆயுளை அதிகரிக்கிறது. இவைதான் 50 ஆண்டு கால உத்தரவாதத்தை வழங்குவதில் சின்டெக்ஸ் நிறுவனத்தின் நம்பிக்கைக்கு அடித்தளமாக உள்ளன.
இந்த அறிமுகம் குறித்து சின்டெக்ஸ் மற்றும் வெல்ஸ்பன் பிஏபிஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யசோவர்தன் அகர்வால் கூறுகையில்,
“இந்த சின்டெக்ஸ் எடெர்னோவின் அறிமுகம், இந்தியாவின் எதிர்கால தண்ணீர் சேமிப்பு பயணத்தில் ஒரு முக்கியமான தருணமாகும். நீண்ட கால மதிப்பு, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை வழங்கும் தயாரிப்புகளை உருவாக்குவதிலேயே உண்மையான கண்டுபிடிப்பு உள்ளது என்று சின்டெக்ஸ் எப்போதும் நம்புகிறது. சிறந்த சுகாதாரத்திற்கான ‘ஆக்டிவ் சில்வர் தொழில்நுட்பம்’ மற்றும் ஈடு இணையற்ற ஆயுளை உறுதி செய்யும் வலுவான வடிவமைப்பு ஆகியவற்றை இணைத்து இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே எடெர்னோ உருவாக்கப்பட்டுள்ளது.