• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்தை சரமாரியாக தாக்கிய பெண்கள்

December 13, 2017 தண்டோரா குழு

செங்கல்ப்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தஷ்வந்த் மீது பெண்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கு குற்றவாளியும் தாயை கொலை செய்தவருமான தஷ்வந்த் மும்பையில் தப்பி சென்று மீண்டும் பிடிபட்டார். இந்நிலையில், சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கொலையாளி தஷ்வந்தை போலீசார் செங்கப்பட்டு மகளிர் நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வந்தனர்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் தஷ்வந்த் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் இருந்து தஷ்வந்தை மீட்ட போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் ஆதரவாக ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் விஜயகுமார் விலகினார்.

இதனால் தஷ்வந்திற்காக வாதாட வழக்கறிஞர்கள் உள்ளனரா என நீதிபதி கேட்டார். அப்போது தனது வழக்கில் தானே வாதாட இருப்பதாக தஷ்வந்த் பதிலளித்தார். எனினும் இலவச சட்ட உதவி மையத்தை அணுக தஷ்வந்துக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

தஷ்வந்த் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பில் தஷ்வந்த் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க