• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹரியானாவில் ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை மறுக்கப்பட்ட பெண் பலி

December 30, 2017 தண்டோரா குழு

சண்டிகரில் ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பவன் குமார்.அவருடைய தந்தை கார்கில் போரில் வீரமரணம் அடைந்தார்.அவருடைய தாயார் சகுந்தலா, சில நாட்களாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கடந்த டிச 28ம் தேதி, அவருடைய மகன் பவன் குமார் அழைத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையின் மருத்துவர்கள், பவன் குமார் தாயாரின் அசல் ஆதார் அட்டையை கேட்டு உள்ளனர். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவருடைய ஆதார் அட்டையை எடுத்து செல்லவில்லை.

ஆனால், அவருடைய ஆதார் அட்டையின் புகைப்படத்தை, பவன்குமார் தனது கைபேசியில் வைத்திருந்தார். அதை காட்டி, தனது தாயாருக்கு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். ஆனால், அசல் ஆதார் அட்டை இல்லாத காரணத்தால், சகுந்தலாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துள்ளனர். இதனால், சகுந்தலா மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பவன்குமார் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது புகார் செய்தார். ஆனால், பவன்குமாரின் புகாருக்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க