• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் புதியவடிவ முகக்கவசம் கண்டுபிடிப்பு

April 16, 2020 தண்டோரா குழு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இன்னவேஷன் செல்லில் புதியவடிவ முகக்கவசம் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.

தமிழக அரசு கொரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்றுநோய் தடுப்பு நடடிக்கைகளை எடுத்துவருகிறது.பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை மிக முக்கியமாக வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் மற்றும் கவுகாத்தி ஐ.ஐ.டி. மாணவர் அரேனியஸ் கருணாகரன் ஆகியோர் இணைந்து
புதியவடிவ முகக்கவசம் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.

கொரோனா தடுப்புப் பணிகளில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள சுகாதாரத் தொழிலாளர்கள்,செவிலியர்கள்,நிர்வாக அலுவலர்கள்,நகராட்சி ஊழியர்கள்,காவல்துறை ஊழியர்கள் என அனைவருக்கும் இது பயன்படும்.ஏன் அறுவை சிகிச்சையின் போதுகூட இதைப் பயன்படுத்தலாம்எனப் பரிந்துரைக்கின்றனர். ஏ 4 அளவு ஒ.எச்.பி. தாள், மக்கள் பொதுவாகப் பயன்படுத்தும் டிரான்ஸ்பரண்ட் கண்ணாடி, இரண்டு பட்டன்கள் என இம்மூன்று பொருட்கள் மட்டுமே இருந்தால் இதனை மிக எளிதாகத் தயார் செய்துவிடலாம். இதைத் தயாரிக்க முப்பத்தைந்து ரூபாய் மட்டுமே செலவாகும். மிகக் குறைந்த செலவில் மிகஅதிகமான அளவில் இதை உற்பத்தி செய்யமுடியும்.

இம்முகக்கவசம் நெற்றியில் இருந்து அணிந்தவரின் கீழ் தாடை மற்றும் காது வரை பாதுகாப்பை வழங்குகிறது. அணிந்தவரின் கழுத்து அசைவுகளுக்கு இது தடையாக இருக்காது.தற்போது ராமகிருஷ்ணா கல்லூரி இன்னவேஷன் செல்லில் ஒருநாளில் 100 முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. முதன்முதலில் இதனை கோவை ராமகிருஷ்ணா மருத்துவமணை ஊழியர்கள் பயன்பாட்டிற்கு இதனை இலவசமாக வழங்கியுள்ளனர். ராமகிருஷ்ணா மருத்துவமணை முதன்மையர் மற்றும் இயக்குனர் பி.சுகுமாரன் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி சி.வி.ராம்குமார் ஆகியோர்களிடம் பிரசன்ன குமார், அரேனியஸ் கருணாகரன் ஆகியோர் இதனை வழங்கினர். இனிவரும் நாட்களில் இதன் தயாரிப்பை மேலும் அதிகப்படுத்தி அனைவருக்கும் இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளனர். சரியான நேரத்தில் சமூக அக்கறையுடன் இவர்கள் எடுத்துள்ள இம்முயற்சி பொதுமக்களின் பெரும்பாராட்டைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க