• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேளாண் விளை பொருட்களுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்

February 13, 2023 தண்டோரா குழு

விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாக கூறி
வேளாண் விளை பொருட்களுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தினர்.

ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு ஆதரவாக விவசாய நிலங்களை இருகூர் பேரூராட்சி நிர்வாகம் கையகப்படுத்துவதாக கூறி தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாழைத்தார், தென்னங்குருத்து, மட்டை ஆகிய பொருட்களுடன் போராட்டம் நடத்தினர்.

இச்சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களை சந்தித்த சு.பழனிச்சாமி,

இருகூர் பேரூராட்சியில் விவசாயம் செய்து வரும் நிலத்திற்கு அருகில் சில தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் இடத்தை வாங்கி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயற்சித்து வருவதாகவும்
அவர்களுக்கு ஆதரவாக 30 அடி உள்ள சாலையை விரிவுபடுத்த இருகூர் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கிறது எனவும் கூறினார். மேலும் இதற்காக தென்னை மரங்களை வெட்ட வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் மரங்களில் அம்புக்குறியிட்டு சென்றுள்ளனர் எனவும் விவசாயிகள் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமத்துள்ளதாக பொய்யான குற்றசாட்டை வைத்து வருகின்றனர் என தெரிவித்தார்.

எனவே கோரிக்கையே இல்லாமல் சாலையை விரிவுபடுத்த தன்னிச்சையாக முயற்சிக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கையை மனுவாக ஆட்சியரிடம் அளித்தனர்.

மேலும் படிக்க