• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேறுபள்ளிக்கு செல்லக்கூடாது என மாணவர்கள் தடுத்த ஆசிரியர் பகவானுக்கு குவியும் பாராட்டுக்கள்

June 22, 2018 தண்டோரா குழு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெளியகரம் அரசு பள்ளி ஆசிரியர் பகவான் திருத்தணி அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணி இடமாறுதல் செய்யப்பட்டார். இதனை அறிந்த மாணவ, மாணவிகள் அவர் வேறுபள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர். பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் அவரை விடாமல் கதறி அழுத காட்சி பார்ப்போரையும் கண்கலங்க வைத்தது.

இது சமூக வலைத்தளங்களிலும் பரவியது. இதையடுத்து, அந்த ஆசிரியருக்கு பலரும் தங்கள் வாழ்க்கத்துக்ளை தெரிவித்து வருகிறனர். இந்த நிலையில் ஆசிரியர் பகவானுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் திரை பிரபலங்கள் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் ஹிர்த்திக் ரோஷன், நடிகர் விவேக் ஆகியோர் ஆசிரியர் பகவானுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நடிகர் ஹிர்த்திக்ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“ ஆசிரியருக்கும் ,மாணவருக்கும் உள்ள இந்த பாசப்பிணைப்பு என் நெஞ்சை உருக்குகிறது “ என கூறியுள்ளார்.


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில்,

ஆசிரியர் பகவான் குறித்து வெளியான செய்தியை பதிவிட்டு ”குரு , சிஷ்யர்கள்” என பதிவிட்டுள்ளார்.


நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில்,

ஒரு ஆசிரியரின் இடமாற்றம் மாணவர்களை கதறி அழச் செய்திருக்கிறது என்றால் அவரது பண்பை நினைத்துப் பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆசிரியர் பகவானுக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க