• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் – பிரேமலதா

March 30, 2017 தண்டோரா குழு

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருகிறார், ஏப்ரல் 6-ம் தேதி முதல் வேட்பாளரை ஆதரித்து ஆர்.கே. நகரில் பிரச்சாரம் செய்வார் என்று அக்கட்சியின் மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என பலரும் வாக்காளர்கள் பணம் கொடுக்கிறார்கள் அதனை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல் இருகிறது என புகார் கூறினார்.

“நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள்தான். ஆனால் அப்படிப்பட்ட விவசாயிகள் மிக கஷ்டப்பட்டு தில்லியில் இத்தனை நாட்களாக போராடி வருகின்றனர். நதிகள் இணைப்பே விவசாயிகளின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். அதேபோல் மீனவர்களின் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும்” என்றார் பிரேமலதா.

தேர்தலில் மற்ற கட்சிகள் எல்லாமே பணத்தை நம்பியுள்ளன. ஆனால் தே.மு.தி.க. மக்களை நம்பியிருக்கிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் நல்லவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புவதாகவும் , தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் என அவர் கூறினார்.

மேலும் படிக்க