• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய நபரை கைது செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்

December 17, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூர், நடுபாளையம் பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் கடந்த மாதம் அவரது வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வேண்டி, பெயிண்டிங் வேலை செய்துள்ளார்.பின்பு மறுநாள் செல்வராஜின் மருமகள் வெளியே செல்வதற்காக பீரோவை திறந்து நகைகளை பார்த்த போது தங்க செயின், மோதிரம், கம்மல் உட்பட 3 சவரன் தங்க நகையை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.

மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் விரைந்து குற்றவாளியை கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன்விசாரணை செய்து வந்த நிலையில், இன்று (17.12.2024) தனிப்படையினர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தனம் மகன்
சகாயராஜ் (30) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வீட்டில் திருடிய வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதன் பேரில் சகாயராஜ் (30) என்பவரை கைது செய்து,மேற்படி வழக்கின் சொத்துக்களான சுமார் 3 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

மேலும் படிக்க