• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது

April 29, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் பரமசிவம் வசித்து வருகிறார். கடந்த பிப்.23ம் தேதி முத்துக்குமார் (33) என்பவர் பரமசிவம் வீட்டிற்கு வந்து தான் சோலார் மின்சாரம் சரி செய்வதாகவும், அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட லைன் இன்ஸ்பெக்டர் எனக் கூறியுள்ளார்.

அதன் பின் சோலார் மின்சாரத்தை சரிபார்பது போல் நடித்து பரமசிவம் வீட்டிலிருந்த 9 பவுன் நகைகளை முத்துக்குமார் திருடி சென்றுள்ளார். இது சம்பந்தமாக சூலூர் காவல் நிலையத்தில் பரமசிவம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்புகாரில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து முத்துக்குமாரை இன்று போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் போலீஸார் விசாரணையில் முத்துக்குமார் பல திருட்டு குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “சூலூர், அன்னூர், கோவில்பாளையம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 7 வீடுகளில் இவர் திருடி உள்ளார். திருடிய 30 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,” என்றனர்.

மேலும் படிக்க