• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகள் பிரச்சனை, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் – ராகுல்காந்தி

March 31, 2017 தண்டோரா குழு

தமிழக விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவராணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் 18 நாட்களாக தொடர்ந்து போராடி வரும் தமிழக விவசாயிகளை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி இன்று சந்தித்தார். பின்னர் விவசாயிகளிடம் அமர்ந்து குறைகளை கேட்டறிந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் “ பிரதமர் மோடி தலமையிலான அரசு விவசாயிகளை புறக்கணிக்கிறது. நாட்டில் பணக்காரரகள் அதிகம் உள்ளனர் . அவர்கள் நலனையே பிரதமர் மோடி பார்க்கிறார்.

ஏழை விவசாயிகள் பற்றி நினைப்பதில்லை. விவசாயிகளை அவமதிப்பது ஏன் ? விவசாயிகளுக்கு பிரதமர் ஓரவஞ்சனை செய்கிறார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.” என்றார் ராகுல்காந்தி.

மேலும் படிக்க