• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகளுக்கு இ பாஸ் வழங்குக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

July 13, 2020 தண்டோரா குழு

விளை நிலங்களில் விவசாய பொருட்களை அறுவடை செய்யவும், சந்தைப்படுத்தவும் அதற்காக வரும் விவசாயிகள், விவசாய கூலிகளுக்கு இ பாஸ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு பழனிசாமி சார்பில் மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் மனு அளிக்கப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் வெங்காயம், தக்காளி, மூட்டை கோஸ், வாழை,தென்னை, வெண்டைக்காய் என பயிர்வகைகளை விவசாயம் செய்து வருகின்றனர்.இதனிடையே மாவட்ட எல்லைப்பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள், விவசாய வேலைக்கு வரும் கூலி தொழிலாளிகள் என பல்வேறு தரப்பினரும் அருகில் உள்ள மாவட்ட எல்லைப்பகுதிகளில் இருந்து வருபவர்களாக இருக்கிறார்கள். ஊரடங்கு காரணமாக விளைபொருட்களை அறுவடை செய்ய கூலி ஆட்கள் வருவதில் சிக்கில் உள்ளது. அவர்களுக்கு இ பாஸ் மறுக்கப்படுகிறது.எனவே விவசாயிகளுக்கு இ பாஸ் வழங்க வேண்டும்.

மேலும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்ள ஆட்களை முழுமையாக விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயத்திற்கு நிலவி வரும் ஆட்கள் பற்றாக்குறை குறையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க