• Download mobile app
15 Dec 2025, MondayEdition - 3596
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விபத்தில் குழந்தைகளை இழந்தவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன

July 14, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் 2௦15-ம் ஆண்டு சாலை விபத்தில் இரண்டு குழந்தைகளை இழந்த தம்பதியினருக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தை சேர்ந்த ஜெண்ரி எட்டிங்க்ஸ் மற்றும் ஹாட்லே. 2௦15ம் ஆண்டு நடந்த ஒரு சாலை விபத்தில் அந்த தம்பதியினர் விபத்தில் சிக்கினர் இதில் அவர்களது மகன் டூப்ஸ் உயிரிழந்தார். அந்த விபத்தின் போது ஹாட்லே நிறைமாத கர்ப்பிணி.

இதனிடையே விபத்தில் சிக்கிய அவர் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது ஆனால் பிறந்த குழந்தை இறந்துவிட்டது.

இந்நிலையில் அந்த தம்பதியினருக்கு தற்போது அழகிய இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளனர். அந்த குழந்தைகளுக்கு அவர்கள் விபத்தில் இறந்த மகனின் பெயரை சூட்டியுள்ளனர்.

அந்த தம்பதியினர் இழந்த குழந்தைகளை கடவுள் அவர்களுக்கு மீண்டும் தந்துள்ளார் என்று அவர்களுடைய குடும்ப நண்பர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க