• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வால்பாறையில் 4 வயது சிறுவனை கடித்து கொன்ற சிறுத்தை

February 9, 2018 தண்டோரா குழு

வால்பாறையில் 4 வயது சிறுவனை சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை நடுமலை எஸ்டேட்டில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளியின் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று சிறுவனை அடித்து இழுத்துச் சென்றது.

இதனால் அதிர்ந்து போன அப்பகுதிவாசிகள், சிறுவனை தேடிச் சென்றபோது தேயிலைத் தோட்டத்தில்,அவனின் தலை தனியே உடல் தனியே கிடந்தது.இதனால் அப்பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில்,சிறுத்தை நடமாட்டம் குறித்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து, வனப்பகுதிக்குள்ளேயே அமர்ந்து விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து,அதிகாலையில் வால்பாறை டி.எஸ்.பி. சுப்பிரமணியன் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து,போராட்டம் கைவிடப்பட்டது.இறந்த குழந்தையின் உடல் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில், குழந்தையைக் கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தி, பொள்ளாச்சி பிரதான சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத வனத்துறையினரின் அலட்சியமே, குழந்தை பலியாக காரணம் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் படிக்க