• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வருவாய்க்காக டாஸ்மாக்கை நம்பாமல் வேறு வழிகளில் தமிழக அரசு கவனம் செலுத்தவேண்டும் – உயர்நீதிமன்ற கிளை

February 6, 2019 தண்டோரா குழு

வருவாய்க்காக டாஸ்மாக்கை நம்பாமல் வேறு வழிகளில் தமிழக அரசு கவனம் செலுத்தவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றி அமைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

24 மணி நேரமும் மதுபானங்கள் கிடைக்கும் போது டாஸ்மாக் நேரத்தை மாற்றி அமைப்பதில் என்ன பயன்? அனைத்து கிராமங்களிலும் கிராம சபைகளை கூட்டி டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றலாமே. மது குடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்றால், டாஸ்மாக்களில் வாகனம் நிறுத்துமிடம் ஏன் அமைக்கப்பட்டுள்ளது? வருவாய்க்காக டாஸ்மாக்கை நம்பாமல் வேறு வழிகளில் தமிழக அரசு கவனம் செலுத்தவேண்டும். மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டது, இனிவரும் தலைமுறையாவது காக்கப்பட வேண்டும் தமிழக அரசுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.

மேலும், டாஸ்மாக், பார்களில் சிசிடிவி கேமிரா பொருத்துவதால் பெரும்பாலான குற்றங்கள் குறையும் என்று வழக்கு விசாரணை பிப்.,28 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க