• Download mobile app
08 Jul 2026, WednesdayEdition - 3801
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் PSGR கிருஷ்ணம்மாள் கல்லூரியில் ‘GRG EVolve Hub’ திறப்பு – பெண்களுக்கு மின்சார வாகன பயிற்சியில் புதிய வாய்ப்பு

March 27, 2026 தண்டோரா குழு

கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மின்சார வாகன பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான ‘GRG EVolve Hub’ மையம் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் டாக்டர் ஆர்.நந்தினி தலைமை தாங்கினார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் டிஎன் ஆட்டோ ஸ்கில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தொடக்க உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் The Energy and Resources Institute-யின் மூத்த உறுப்பினர் டாக்டர் ஜெயந்தா மித்ரா,சர்வதேச மின்சார வாகன சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த சீனிவாஸ் குமார், E-Royce Motors India Private Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுதாகர், WIEV Energetic Private Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கலைவாணி நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மையம் மூலம் பெண்களுக்கு இலவச மின்சார வாகனப் பயிற்சி,வாகன பராமரிப்பு திறன்,சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் தொழில்முனைவு வழிகாட்டுதல், மற்றும் பயிற்றுநர் மேம்பாட்டு திட்டங்கள் வழங்கப்படுகின்றன.மேலும், பயிற்சி பெற்ற பெண்களுக்கு மின்சார வாகனங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதன் மூலம் நலிவடைந்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த முயற்சி Tamil Nadu Skill Development Corporation ஆதரவுடன் பசுமைத் திறன்கள் கொண்ட தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

நிகழ்ச்சியில் செயலாளர் டாக்டர் என். யசோதா தேவி,பேராசிரியர்கள்,மாணவிகள் மற்றும் பெண்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி நிறைவில் கல்லூரிமுதல்வர் டாக்டர் பி.பி.ஆரத்தி நன்றியுரை வழங்கியபோது, “GRG EVolve Hub பெண்கள் தலைமையிலான பசுமை போக்குவரத்து மாற்றத்திற்கு முக்கிய முன்னேற்றமாக அமையும்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க