• Download mobile app
13 Aug 2026, ThursdayEdition - 3837
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

Ananya’s Nana Nani Phase 7 ஒப்படைப்பு விழா: 355 வீடுகள் பயனாளர்களுக்கு வழங்கல்

March 25, 2026 தண்டோரா குழு

மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வாழ்விடத் திட்டமான Ananya’s Nana Naniயின் Phase 7 வீடுகள் ஒப்படைப்பு விழா மார்ச் 25, 2026 அன்று கோயம்புத்தூரில் விமர்சையாக நடைபெற்றது.

15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இத்திட்டம், ஏற்கனவே 6 கட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 5000-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் வசித்து வரும் நிலையில்,355 வீடுகள் கொண்ட Phase 7 இந்நிகழ்வில் பயனாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் முழுமையான வசதிகளுடன் செயல்படும் சமூகமாக இத்திட்டம் மேலும் வலுவடைந்துள்ளது.

இத்திட்டத்தின் விரிவாக்கமாக Phase 8, Phase 9 மற்றும் Phase 10 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.நிகழ்வின் முக்கிய அம்சமாக ஸ்ரீ கல்யாண சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.மேலும், 20 அடி உயர முருகன் சிலை பக்தர்களுக்கு ஆன்மிக உணர்வை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியை முன்னிட்டு மார்ச் 24 அன்று தேச மங்கைஅரசி ஆன்மிக சொற்பொழிவு வழங்கினார்.தொடர்ந்து மார்ச் 25 அன்று ஸ்ரீ சந்தீப் நாராயண் மற்றும் குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும்,பொதுமக்கள் முன்பதிவு செய்து இத்திட்டத்தின் வசதிகளை ஒரு நாள் முழுவதும் அனுபவிக்கும் வகையில் One Day Tour திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்மிகம், அமைதி மற்றும் சமூக ஒற்றுமையை முன்னிறுத்தும் வகையில் இந்நிகழ்வு சிறப்பாக அமைந்தது.

மேலும் படிக்க