• Download mobile app
07 Jul 2026, TuesdayEdition - 3800
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிட்டுக்குருவிகள் தினம்: கோவையில் மாணவர்களுக்கு பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

March 25, 2026 தண்டோரா குழு

உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கோபால் நாயுடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு வனத்துறை கோவை வனக்கோட்டம்,கோவை வனச்சரகம் மற்றும் ‘வனஉயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை’ (WNCT) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கோவை மாவட்ட வன அலுவலர் N.வெங்கடேஷ் பிரபு (IFS),உதவி வனப் பாதுகாவலர் G. விஜயகுமார், வனச் சரக அலுவலர் V. திருமுருகன், WNCT நிறுவனர் N.சாதிக் அலி, அறங்காவலர் ராஜீவ், ஒருங்கிணைப்பாளர் மு.சிராஜ்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்களும் பங்கேற்றனர்.

நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட வன அலுவலர் N. வெங்கடேஷ் பிரபு, பறவைகள் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி, சூழலியல் சமநிலையை பேணுவதில் அவற்றின் பங்கு முக்கியமானது என தெரிவித்தார்.

உதவி வனப் பாதுகாவலர் G. விஜயகுமார், மாணவர்களுடன் கலந்துரையாடி, பல்லுயிர் பாதுகாப்பில் காடுகளின் முக்கியத்துவம் மற்றும் இயற்கையை காக்க வேண்டிய அவசியத்தை விளக்கினார்.WNCT நிறுவனர் சாதிக் அலி, கோடைக்கால நீர் பற்றாக்குறையை சமாளிக்க பறவைகளுக்கு உதவும் நோக்கில், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு நீர் கிண்ணங்கள் வழங்கப்பட்டதாக கூறினார்.

ஒருங்கிணைப்பாளர் மு.சிராஜ்தீன்,இளம் தலைமுறையினர் பறவைகள் பாதுகாப்பில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என வலியுறுத்தி, வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் நீர் கிண்ணங்களை வைத்து பறவைகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.மாணவர்கள் பறவைகள் மற்றும் இயற்கை பாதுகாப்பில் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற செய்தியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

மேலும் படிக்க