• Download mobile app
28 Jun 2026, SundayEdition - 3791
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் விவேக்

December 30, 2016 தண்டோரா குழு

தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவின் மகன் விவேக், வருமானவரித் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் வெள்ளிக் கிழமை ஆஜராகியுள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாராக இருந்த ராமமோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக் வீடுகள், அலுவலகங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

அதைப் போல், சென்னை நந்தனம் பகுதியில் விவேக் நடத்தி வரும் நிறுவனத்திலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அங்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விவேக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்திற்கு வருவதற்காக வருமானவரி புலனாய்வுத் துறையினர் விவேக்கிற்கு சம்மன் அனுப்பினர்.

ஆனால், குடும்பப் பிரச்சினை காரணமாக ஆஜராக முடியவில்லை என விவேக் வருமான வரித்துறையினரிடம் தொடர்ந்து கூறிவந்தார்.இந்நிலையில், வெள்ளியன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் விவேக் விசாரணைக்காக ஆஜரானர்.

மேலும் படிக்க