• Download mobile app
27 Jun 2026, SaturdayEdition - 3790
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் 84 சதவீத பெண் தொழில்முனைவோர் டிபிஎஸ் பேங்க் இந்தியா நடத்திய ‘பெண்கள் மற்றும் நிதி’ ஆய்வு அறிக்கையில் தகவல்

June 27, 2026 தண்டோரா குழு

எம்எஸ்எம்இ தினம் 2026-ஐ முன்னிட்டு, டெலாய்ட் டச் தோமட்சு இந்தியா எல்எல்பி நிறுவனத்துடன் இணைந்து, டிபிஎஸ் பேங்க் இந்தியா தனது ‘பெண்கள் மற்றும் நிதி’ தொடர்பான இரண்டாவது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

‘டிஜிட்டல் வாய்ப்பு: அணுகுதல், பயன்பாடு மற்றும் நம்பிக்கை’ என்ற இந்த அறிக்கை, இந்தியா முழுவதும் உள்ள பணம் சம்பாதிக்கும் பெண்கள் டிஜிட்டல் பேமெண்ட்கள், வங்கி, கடன் மற்றும் முதலீட்டு தளங்களை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதை ஆய்வு செய்து வருகிறது.

இந்த ஆய்வு பெண் தொழில்முனைவோர், அதிக சொத்து மதிப்புடைய பெண்கள் மற்றும் கிராமப்புறங்களில் வருமானம் ஈட்டும் பெண்கள் என இந்தியா முழுவதும் உள்ள 1,342 பெண்களிடம் கருத்துகளை கேட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.டிஜிட்டல் மயமாக்கல் என்பது பெண்களின் வெவ்வேறு வாழ்க்கை நிலைகள், வருமானப் பிரிவுகள் மற்றும் புவியியல் அமைப்புகளுக்கு ஏற்ப அவர்களின் நிதிப் பயணங்களை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதில் இந்த ஆய்வு கவனம் செலுத்துகிறது.

செலவு செய்வதில் உள்ள முன்னுரிமைகள், டிஜிட்டல் பயன்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கான முக்கியக் காரணிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் பாதுகாப்பான டிஜிட்டல் பேங்கிங் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஆகியவைகளும் இதில் இடம் பெற்றுள்ளது.ஆய்வில் பெண் தொழில்முனைவோர்கள் தான் டிஜிட்டல் நிதி பயன்பாடு மற்றும் இணைய தளங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனை கருவிகள்தான் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன; 84 சதவீத பெண் தொழில்முனைவோர் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆய்வில் பங்கேற்ற பெண் தொழில்முனைவோரில் 72 சதவீதம், அதிக சொத்து மதிப்புடைய பெண்களில் 77 சதவீதம் மற்றும் கிராமப்புறங்களில் வருமானம் ஈட்டும் பெண்களில் 54 சதவீதம் பேர் UPI-யைப் பயன்படுத்துகின்றனர்.

இது இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பின் வளர்ந்து வரும் பயன்பாட்டை காட்டுகிறது.வங்கி மற்றும் பணப்பரிவர்த்தனைகளைத் தாண்டி, பெண் தொழில்முனைவோர் விரிவான டிஜிட்டல் நிதி கருவிகள் மற்றும் தளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் 38 சதவீதம் பேர் கடன் வழங்கும் தளங்களையும், 29 சதவீதம் பேர் பங்கு வர்த்தக தளங்களையும் பயன்படுத்துகின்றனர்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அதிக சொத்து மதிப்புடைய பெண்களில் 28 சதவீதம் பேர் தங்கள் முதலீடுகளுக்காக பங்கு வர்த்தக தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவை வழங்கும் வசதி மற்றும் எளிமையான அணுகு முறை காரணமாக, டிஜிட்டல் முதலீட்டுக் செயலிகளை பயன்படுத்துவதில் அவர்களுக்கு இருக்கும் சௌகரியமும் திறமையும் அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.

இது குறித்து குளோபல் டிரான்சாக்‌ஷன் சர்வீசஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் பேங்கிங், பைனான்சியல் இன்ஸ்டிடியூஷன்ஸ் மற்றும் எஸ்எம்இ-களின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவரான திவ்யேஷ் தலால் கூறுகையில்,

“பெண்கள் தங்கள் நிதியைக் கையாளும் விதத்தில் ஏற்பட்டிருக்கும் ஊக்கமளிக்கும் மாற்றத்தை இந்த அறிக்கையின் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. பெண் தொழில்முனைவோரிடையே, டிஜிட்டல் பயன்பாடு என்பது தொழில் மேலாண்மையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறி வருகிறது. பேமெண்ட்கள், கிரெடிட் மற்றும் பணியாளர் ஊதியம் முதல் வாடிக்கையாளர்களைப் பெறுதல் மற்றும் எதிர்காலத் திட்டமிடல் வரை அனைத்திற்கும் இவை ஆதரவளிக்கின்றன” என்றார்.

“டிஜிட்டல் பயன்பாடு அதிகரிக்கும் போது, தொழில்முனைவோர் தங்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் மற்றும் அவர்களின் லட்சியங்களை ஆதரிக்கும் தீர்வுகளை அதிகளவில் தேடுகிறார்கள். இந்த வேகத்தைத் தக்கவைக்க, பாரம்பரிய வங்கி முறைகளைத் தாண்டி, தொழில்முனைவோரின் வணிகப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்கு உதவும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது அவசியமாகும்.

வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப தொடர்ந்து புதுமைகளை உருவாக்குவதன் மூலமும், பெண் தொழில்முனைவோர்கள் புதிய வணிகங்களை துவங்கவும், அதை விரிவுபடுத்தவும் அவர்களுக்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம்” என்றும் அவர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க