• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு கீதாலட்சுமி ஆஜரானார்

April 12, 2017 தண்டோரா குழு

எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி துணைவேந்தர் கீதாலட்சுமி வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு புதன்கிழமை ஆஜரானார்.கடந்த 7-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் ,எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அவர்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அமைச்சர் விஜயபாஸ்கர்,சரத்குமார்,சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் ஆஜரான நிலையில் கீதாலட்சுமி மட்டும் ஆஜராகவில்லை. வருமான வரித்துறையினர் சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கீதாலட்சுமி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறையினரின் சம்மனை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் கூறிவிட்டது. இதனை அடுத்துவருமான வரித்துறை அதிகாரிகள் முன் கீதாலட்சுமி இன்று ஆஜராகினார். அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க