• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வரி பாக்கிக்காக 2007ம் ஆண்டே ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லம் முடப்பட்டுள்ளது – வருமான வரித்துறை

January 24, 2019 தண்டோரா குழு

ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், அந்த இல்லம் முடக்கப்பட்ட சொத்து பட்டியலில் இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலாளிதாவிற்கு சொந்தமான வீடு சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. அவரது மறைவிற்கு பின் அந்த இல்லத்தை நினைவிடமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான கருத்து கேட்பு கூட்டங்கள் சமீபத்தில் நடத்தப்பட்டது.

இதற்கிடையே, இதற்கு தடை கேட்டு டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கின் விசாரணையின் போது, வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், அதில், ரூ 16.75 கோடி வரி பாக்கிக்காக கடந்த 2007-ம் ஆண்டிலே ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை முடக்கி விட்டோம் என்றும் அதுமட்டுமின்றி ஐதராபாத்தில் உள்ள ஒரு வீடும் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வரி பாக்கியை செலுத்திவிட்டால் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற ஆட்சேபமில்லை என்று வருமானவரித் துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நிலுவைத்தொகையை செலுத்துவதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

மேலும் படிக்க