• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வனப்பகுதிகளில் யானைகள் உயிரிழப்பு என்பது இயற்கை முறையில் உள்ளது – வனத்துறை அமைச்சர் தகவல்

May 3, 2023 தண்டோரா குழு

கோவை வடகோவையில் தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தினை வனத்துறை அமைச்சர் டாக்டர். மதிவேந்தன் பார்வையிட்டார். உள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

நான்கு நாட்களுக்கு கோவை பகுதியில் வனத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.மதுக்கரையில் ஏற்பட்ட காட்டுத்தீயை வனத்துறையினர் துரித கதியில் செயல்பட்டு தீயை அனைத்துள்ளோம்.

கோவை சாடிவயலில் யானைகள் முகாம் அமைப்பதற்கான நடவடிக்கைக்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கபட்டுள்ளது.சாடிவயல் பகுதியில் முகாம் அமைப்பதற்கான பணிகளை ஆய்வு செய்யவுள்ளது.யானைகள் உயிரிழப்பு குறித்த குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்யபட்டது. வனப்பகுதிகளில் யானைகள் உயிரிழப்பு என்பது இயற்கை முறையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது முதன்மை தலைமை வன பாதுகாவலர் சுப்ரத் முகபத்ரா, கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் மற்றும் இயக்குநர் சேவா சிங், வன பாதுகாவலர் மற்றும் கலை இயக்குனர் (ஆனைமலை புலிகள் காப்பகம்) ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க