• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த காது கேளாத இளம்பெண்

May 2, 2017 தண்டோரா குழு

பாடல், நடனம் மற்றும் ஹார்மோனியம் வாசித்தல் ஆகியவற்றில் தனது திறமையை காட்டிய காது கேளாத 23 வயது இளம்பெண், 2௦17-ம் ஆண்டிற்கான லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் ரச்சனா டி ஷா. இவருக்கு வயது 23. இவர் பிறந்தது முதலே காது கேட்கும் திறனை இழந்தவர்.

தன்னுடைய மகள் இந்த குறையுடன் பிறந்து விட்டாளே என்று அவருடைய தாயார் ஞானேஸ்வரி ஷா மனம் தளரவில்லை. அவர் ரச்சனாவுக்கு காதுகேளாதவர்களுக்கு கேட்க உதவும் கருவியை வாங்கி கொடுத்தார்.

அந்த கருவியின் உதவியுடன் ரச்சனாவை இசையை கேட்க வைத்தார். இதன் மூலம் ரச்சனாவின் இசை பயணம் தொடங்கியது. இசையோடு இணைந்து அவர் பரத கலையையும் கற்றுக்கொண்டார். அவருடைய விடாமுயற்சியால் பரத கலையில் ‘சங்கீத் விஷாரத்’ என்னும் பட்டமும் பெற்றார்.

அவருக்கு சிறுவயதிலேயே பேசுவதற்கு பயிற்சி கொடுத்ததையடுத்து, ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய மொழிகளை பேச கற்றுக்கொண்டார். மேலும், பி.டெக் பாடத்தில் முதல் வகுப்பில் பட்டமும் பெற்றார்.

ரச்சனாவின் தாயார் ஞானேஸ்வரி பேசுகையில்,

“ரச்சனா பிறக்கும் போதே செவி திறனை இழந்துவிட்டாள் என்று மருத்துவர்கள் மூலம் தெரிந்துக்கொண்டோம். அவளுக்கு காது கேட்க உதவும் கருவியை வாங்கி தந்தோம். ஆறு மாதங்களுக்கு பிறகு, மெல்ல மெல்ல பேச தொடங்கினாள். சிகிச்சையின் ஒரு பகுதியாக, இசை உலகத்தை அவளுக்கு அறிமுகப்படுத்தினோம்.

சில ஆண்டுகளுக்கு பிறகு, ரச்சனாவுக்கு நடனத்திலும் நாட்டம் இருப்பதை கவனித்தோம். அதன் பிறகு அவள் நடனத்தை கற்றுக்கொண்டாள். தனது ஆறு வயதில் முதல் மேடை நிகழ்ச்சியை தொடங்கினாள். ஒன்பது வயதில் தனது பரதநாட்டிய பயிற்சியை முடித்து, காந்தர்வ மகாவித்யாலையா அமைப்பிலிருந்து ‘சங்கீத் விஷாரத்’ பட்டம் பெற்றாள். ஹார்மோனிய இசை கருவியில் எட்டு பாரம்பரிய ராகங்களை வாசித்து பாடவும் அவளாள் முடியும்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க