• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.2.37 கோடி மோசடி வழக்கில் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

April 14, 2023 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கலைமணி(45). இவர் அதே பகுதியில் நிதி நிறுவனங்கள் நடத்தி வந்தார். மேலும் அந்நிறுவனங்களுக்கு இயக்குனராகவும் இருந்து வந்தார். இதில் கலைமணியின் தந்தை பழனிசாமி கவுண்டர் (65),மாமா சிவசுப்பிரமணி (58), நண்பர் சாமிநாதன் (48) ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஏராளமான மக்கள் முதலீடு செய்தனர். ஆனால் முதலீடு செய்யத மக்களுக்கு அசல் மற்றும் வட்டி பணம் கொடுக்கவில்லை. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் 24 பேரிடம் ரூ. 2 கோடியே 37 லட்சத்து 97 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் கலைமணி உள்பட 4 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட கலைமணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 51 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பு கூறினார். மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பழனிசாமி கவுண்டர், சாமிநாதன், சிவசுப்பிரமணி ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடர்பு இல்லை என கூறி 3 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கண்ணன் அஜராகி வாதாடினார்.

மேலும் படிக்க