• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரத்த கண்ணீர் வடிக்கும் 3 வயது குழந்தை!

July 8, 2017 தண்டோரா குழு

ஹைதராபாதில் 3 வயது சிறுமியின் கண்களிலிருந்து ரத்த கண்ணீர் வரும் சம்பவம் அவளது பெற்றோரையும்,மருத்துவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹைதராபாத் நகரில் 3 வயது சிறுமி அஹான அப்சல் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அவள் அழும்போது, அவளுடைய கண்களிலிருந்து ரத்தம் வருவதை கண்ட அந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளர்னர்.

அவளுக்கு சுமார் 16 மாதங்களுக்கு முன் காய்ச்சல் வந்து, அவளுடைய மூக்கிலிருந்து ரத்தம் வந்துள்ளது. தற்போது கண்கள், வாய், காது, ஆகிய உறுப்புகளிலிருந்து ரத்தம் வருவதை கண்ட அவளுடைய பெற்றோர் உடனே அவளை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவளுக்கு Hematidrosis என்னும் அரிய வியாதி இருப்பதாக அவளை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குழந்தை புற்றுநோய் மருத்துவர் டாக்டர் சிரிஷா கூறுகையில்,

“அஹனவிற்கு Hematidrosis என்னும் அரிய வியாதி இருப்பதால், உடல் பாகங்களிலிருந்து ரத்தம் வருகிறது. மருத்துவ சிகிச்சைக்கு பிறகு, ரத்தப்போக்கு குறைந்துள்ளது. அவளுக்கு அதிக ரத்த மாற்றம் தேவைப்படுகிறது.

அஹனாவின் தந்தை முஹமத் அப்சல் கூறுகையில்,

“அஹனவிற்கு ஒரு வயது இருக்கும்போது, நிமோனியா வியாதியால் அவதிபட்டாள், அவளுடைய மூக்கிலிருந்து ரத்தம் வந்தது. அவளுக்கு இருக்கும் வியாதியிலிருந்து முழுமையாக குணமடைவதை குறித்து மருத்துவர்களிடம் கேட்டேன், ஆனால் அவர்களிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. தற்போது, மருத்துவர்கள் மற்ற மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை பெற்று என் மகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதன் மூலம் என் மகள் காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசு உதவ வேண்டுமென்று கோரிக்கை விடுக்கிறேன்” என்று கூறினார்.

மேலும் படிக்க