• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேற்கு மண்டல ஐஜி சுதாகர் பதவியேற்பு, உளவுப் பிரிவு உதவி கமிஷனரும் பொறுப்பேற்பு

June 4, 2021 தண்டோரா குழு

மேற்கு மண்டல ஐ.ஜி-யாக சுதாகர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேற்கு மண்டல ஐஜி-யாக பணியாற்றி வந்தவர் அமல்ராஜ். இவர் பதவி உயர்வு பெற்று சென்னையில் கூடுதல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டார். இவருக்கு பதிலாக மதுரை சரகத்தில் டிஐஜியாக பணியாற்றி வந்த சுதாகர் பதவி உயர்வு பெற்று மேற்கு மண்டல ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டார்.

இதேபோல் கோவை சரக டிஐஜி ஆக பணிபுரிந்த நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டு சென்னை சட்டம்-ஒழுங்கு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவரது இடத்திற்கு திண்டுக்கல்லில் டிஐஜியாக பணிபுரிந்து முத்துசாமி பணியமர்த்தப்பட்டார்.

இந்நிலையில் இன்று மேற்கு மண்டல ஐ.ஜி-யாக சுதாகர் ரேஸ் கோர்சில் உள்ள அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.புதிய ஐஜியாக பதவி ஏற்றுக்கொண்ட அவருக்கு போலீஸ் உயரதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல் கோவை சரக டிஐஜி-யாக முத்துசாமியும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.கோவை மாநகர போலீசில் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக சேலத்தில் நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றிய முருகவேல் நியமிக்கப்பட்டிருந்தார். இங்கு கூடுதல் துணை கமிஷனராக பணியாற்றிய ரமேஷ் கிருஷ்ணன் நாகப்பட்டினம் கடலோர காவல் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிய உளவுப்பிரிவு உதவி கமிஷனர் முருகவேல் பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேலும் படிக்க