September 24, 2026
தண்டோரா குழு
ஜி.ஆர்.ஜி. மாடர்ன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளியில், RAIS (சர்வதேசப் பள்ளிகளின் சங்கம்) சார்பில் சறுக்கு விளையாட்டு விழா 23.09.2026 அன்று உற்சாகமாக நடைபெற்றது.
பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்று, வேகம், திறமை, சமநிலை மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
நிகழ்வில் GVK வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் வெங்கடலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சுனிதா சிறப்பு விருந்தினராகவும், முதல்வர் வீணாகுமாரி சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைமைப் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.
குத்துவிளக்கு ஏற்றுதல்,இறைவணக்கம், மாணவர்களின் சறுக்கு நடன நிகழ்ச்சி மற்றும் ஆசிரியர்களின் இசை நிகழ்ச்சி உள்ளிட்டவை விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய அனைத்து மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இளம் சறுக்கு வீரர்களின் திறமை, தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்திய இந்த நிகழ்வு, மாணவர்களுக்கு மறக்க முடியாத விளையாட்டு விழாவாக அமைந்தது.