• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேயர், துணை மேயர் தலைமையில் கோவை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு இன்று பயிற்சி

March 18, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றியது.மேலும், அதிமுக 3 வார்டுகளிலும்,எஸ்.டி.பி.ஐ ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன.மாநகராட்சி 100 வார்டுகளில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் கடந்த 2ம் தேதி பதவியேற்றனர்.

மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கவுன்சிலர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதே போல் கடந்த 4ம் தேதி மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று மேயராக கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயராக வெற்றி செல்வன் தேர்வு செய்யப்பட்டனர்.

பதவியேற்ற கவுன்சிலர்களில் 3 பேர் 30 வயதிற்கும் குறைவானவர்கள் ஆவர்.இதில், 97-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் நிவேதா சேனாதிபதி இளம் வயது கவுன்சிலர் ஆவார்.இவரது வயது 22 ஆகும்.மேலும், வெற்றி பெற்ற கவுன்சிலர்களின் சராசரி வயது 47ஆக உள்ளது.இது தவிர, 25 கவுன்சிலர்கள் இளநிலை பட்டப்படிப்பும், 13 கவுன்சிலர்கள் முதுகலை பட்டப்படிப்பும் முடித்துள்ளனர்.

ஒருவர் பி.எச்.டி., முடித்துள்ளார். மேலும், 54 பேர் பிளஸ்2 அல்லது அதற்கும் குறைவான கல்வி தகுதி பெற்றுள்ளனர்.7 கவுன்சிலர்கள் அடிப்படை கல்வி பெறாதவர்கள் ஆவர்.55 பேர் பெண் கவுன்சிலர்களாக உள்ளனர்.

இந்நிலையில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயர் வெற்றி செல்வன் தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான அறிமுக பயிலரங்கம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று நடத்தப்பட உள்ளது.இதில் கவுன்சிலர் பதவிக்கு உள்ள அதிகாரிகள்,செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க