• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மூத்த குடிமக்களுக்காக புதிய பிரத்யேக குடியிருப்பு – ‘இன்பினியம் ஒன் லைப்’ அறிமுகம்

September 7, 2026 தண்டோரா குழு

மூத்த குடிமக்களின் ஓய்வு கால வாழ்க்கைக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் வகையில், கோவை வேடப்பட்டி பகுதியில் ‘இன்பினியம் ஒன் லைப்’ என்ற பிரத்யேக மூத்த குடிமக்கள் குடியிருப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இன்பினியம் நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்பு, மூத்த குடிமக்கள் பிறரைச் சார்ந்திருக்காமல் சுதந்திரம், பாதுகாப்பு, தோழமை மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘இன்பினியம் ஒன் லைப்’ குடியிருப்புகளின் அறிமுக நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 11, 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. மருத்துவ வசதி, நல்வாழ்வு, பாதுகாப்பு, சமூகத் தொடர்பு உள்ளிட்ட மூத்த குடிமக்களின் தேவைகளை ஒருங்கிணைத்து, ஒரே வளாகத்தில் வழங்கும் வகையில் இந்த குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது.

கோவை வேடப்பட்டியில்,மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் நொய்யல் ஆற்றை ஒட்டிய அமைதியான இயற்கை சூழலில் இந்த குடியிருப்பு அமைந்துள்ளது.இங்கு இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடுகள் வழங்கப்படுகின்றன.

இது தொடர்பாக கோவையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இன்பினியம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் மற்றும் இயக்குநர் கார்த்திகேயன் கூறியதாவது:

“முதியோர்களின் ஓய்வு கால வாழ்க்கை என்பது மற்றவர்களைச் சார்ந்து வாழும் காலமாக இருக்கக் கூடாது. அவர்கள் தங்களது விருப்பங்களையும், ஆர்வங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி, புதிய நட்புறவுகளை உருவாக்கி, சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே ‘ஒன் லைப்’ திட்டத்தின் நோக்கம்.

குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் கோவைக்கு வெளியிலோ அல்லது வெளிநாடுகளிலோ வசிக்கும் நிலையில், தங்களது பெற்றோர் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த குடியிருப்பு உருவாக்கப்பட்டுள்ளது.பகல், இரவு என எந்த நேரத்திலும் தேவையான பராமரிப்பு மற்றும் ஆதரவு கிடைக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மருத்துவம், பாதுகாப்பு மற்றும் சமூக வாழ்க்கை ஆகியவற்றில் எந்த சமரசமும் இல்லாமல் மூத்த குடிமக்கள் சுயமாக வாழ முடியும்,” என தெரிவித்தனர்.

மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன், குடும்பத்தினருக்கும் நிம்மதியை வழங்கும் வகையில் ‘இன்பினியம் ஒன் லைப்’ கோவையில் புதிய முன்னுதாரணமாக அமையும் என நிறுவன நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க