• Download mobile app
15 Jun 2026, MondayEdition - 3778
FLASH NEWS
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மும்பை கபாடியா அங்காடியில் தீ விபத்து

January 7, 2017 தண்டோரா குழு

மும்பை புறநகர் பகுதியான குர்லாவில் உள்ள கபாடியா அங்காடியில் சனிக்கிழமை (ஜனவரி 7) திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. அதில் அங்கிருந்த புடவை மற்றும் கோவில் பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

குர்லா அங்காடியில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டதில் அங்கு இருந்த புடவை மற்றும் கோவில் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் நான்கு தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை ஆனால், பல கோடி மதிப்புள்ள புடவைகள் மற்றும் பொருள்கள் நாசமடைந்தன.

இச்சம்பவத்திற்கு குறைந்த மின்னழுத்தம் காரணமாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறோம். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க