• Download mobile app
27 Jul 2026, MondayEdition - 3820
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜூலை 28 முதல் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

July 27, 2026 தண்டோரா குழு

இந்திய ஹாக்கியின் வருங்கால நட்சத்திரங்களை அடையாளம் காணும் 16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் – 2026 போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி ஆஸ்ட்ரோ டர்ஃப் ஹாக்கி மைதானத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு ஹாக்கி அலகு (HUT), ஹாக்கி இந்தியாவின் ஆதரவுடன் நடத்தும் இந்த தேசிய அளவிலான தொடரில், 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.நாடு முழுவதும் இருந்து சிறந்த இளம் ஹாக்கி வீரர்கள் பங்கேற்பதால், இந்திய ஹாக்கியின் எதிர்கால சர்வதேச நட்சத்திரங்களை நேரில் காணும் அரிய வாய்ப்பாக இந்தப் போட்டி அமையவுள்ளது.

12 நாட்கள் நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப்பில் 700-க்கும் மேற்பட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் ஹாக்கி இந்தியா நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் தங்குமிடம், போக்குவரத்து, மருத்துவ வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இலவசமாக போட்டிகளை கண்டு,இந்திய ஹாக்கியின் வருங்கால வீரர்களை உற்சாகப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த தகவல்களை,அகில இந்திய ஹாக்கி சங்கத்தின் பொருளாளர் சேகர் ஜெ. மனோகரன் மற்றும் தமிழ்நாடு ஹாக்கி அலகின் பொதுச் செயலாளர் டாக்டர் பி. செந்தில்ராஜ்குமார் ஆகியோர் கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

மேலும் படிக்க