• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் துணை வேந்தர் கணபதிக்கு மார்ச் 2 தேதி வரை நீதிமன்ற காவல்

February 16, 2018 தண்டோரா குழு

லஞ்ச புகார் வழக்கில் கைதான கோவை பாரதியார் பல்கலை  முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு மார்ச் 2 வரை நீதிமன்றக் காவல் அளித்து  கோவை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதவி பேராசிரியர் பணிக்கு 30 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கோவை பல்கலை துணைவேந்தராக இருந்த கணபதி மற்றும் உதவி செய்ததாக தர்மராஜ்ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், 4 நாட்கள் விசாரணை முடிந்ததையடுத்து கணபதி கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் வினோ முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதி, போலீசார் உடல்ரீதியாக துன்புறுத்தினார்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கணபதி போலீசார் தன்னை உடல்ரீதியாக துன்புறுத்தவில்லை என்றும் மன ரீதியாக துன்புறுத்தினார்கள் என்றும் கூறினார். இதுமட்டுமன்றி தன்னை கட்டாயப்படுத்தி போலீசார் வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து,கணபதியையும், தர்மராஜூவையும் மார்ச் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க