• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் அணிக்கு மாறிய தினகரன் ஆதரவு எம்.பிகள்

November 27, 2017 தண்டோரா குழு

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி.க்களான விஜிலா சத்யானந்த், நவநீதகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அமைதிப் பேரணி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி.க்களான விஜிலா சத்யானந்த், நவநீதகிருஷ்ணன், புதுச்சேரி எம்பி கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது. இதனை அ.தி.மு.க. ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன் உறுதிப்படுத்தினார்

டி.டி.வி.தினகரனுக்கு 20 சட்டமன்ற உறுப்பினர்கள், 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்த நிலையில் தற்போது 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க