• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்முறையாக காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கு பதவி!

January 23, 2019 தண்டோரா குழு

பிரியங்கா காந்தியை உத்தரபிரதேச கிழக்கு பகுதியில் பொதுச் செயலாளராக ராகுல் காந்தி நியமித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் முக்கிய கட்சிகளுக்கும் அதற்கான ஆயுத்த பணியில் இறங்கியுள்ளன. ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து வருகிறது. மறுபுறம் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியும் உருவாகிவருகிறது.

இதற்கிடையில், உத்திர பிரதேசத்தில் அகிலேஷ்-மாயாவதி கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் தரப்படவில்லை. இதனால் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில், உத்திர பிரதேச கிழக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார். கூட்டணியில் இடம் கிடைக்காததால் பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

காங்கிரசில் பதவி தந்தன் மூலம் பிரியங்கா நேரடியாக அரசியலுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க