• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீனவர்கள் விடுதலை குறித்து இலங்கை அரசை மோடி வலியுறுத்த வேண்டும் – மு.க. ஸ்டாலின்

May 5, 2017 தண்டோரா குழு

இலங்கை செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 5 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 134 படகுகளை விடுவிக்க இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

“தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும். இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை நீண்ட காலமாக பறிமுதல் செய்து வைத்துள்ளது.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி இலங்கை அரசு வசம் உள்ள 134 தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதனை அங்கு வலியுறுத்த வேண்டும்,” என்றார்.

இலங்கையில் நடைபெற உள்ள புத்த மத விழாவான “விசாகா” தினத்தை கொண்டாட பிரதமர் மோடிக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த விழாவில் 1௦௦க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க