• Download mobile app
05 Sep 2026, SaturdayEdition - 3860
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் தில்லிக்கு அழைத்து செல்லப்படுகிறார் டிடிவி தினகரன்

April 29, 2017 தண்டோரா குழு

சென்னையில் நடத்தப்பட்ட 3 நாள் விசாரணையை அடுத்து டி.டி.வி.தினகரனுடன் தில்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று தில்லி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தில்லி குற்றப்பிரிவு காவல் துறையினர் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஏப்ரல் 16 -ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணைக்காக அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னை அழைத்து வரப்பட்டார். தினகரனின் மனைவியிடத்திலும், அவரது இல்லம், அலுவலகம் என பல இடங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார். அவரும் சென்னை அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் தில்லி போலீசாருக்கு சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே சென்னையில் நடந்த விசாரணை முடிவடைந்ததை அடுத்து, தினகரனுடன் தில்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று தில்லி திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க